Crime : நடுரோட்டில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி.யும், பிரபல ரவுடியுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் காலித் அஸீம் ஆகியோர் சில நாட்களுக்கு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரசேதத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது. நடுரோட்டில் கல்லூரி மாணவரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


மாணவி சுட்டுக் கொலை


உத்தர பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ரோஷினி அஹிர்வர் (21). இந்த மாணவி தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பெண்ணை வழிமறித்து கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் காவல் நிலையத்திற்கு 200 மீட்டர் தொலையில் நடந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை சுட்டுவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 


மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண் ரத்த வெள்ளத்தில் இருப்பது அவர்களை சிலர் பிடிக்க முயல்வது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை ராஷ்ட்ரிய ஜனதா தளம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட இருவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம்: 2ம் கட்ட விசாரணையை துவக்கிய அமுதா ஐஏஎஸ் - 5 பேர் ஆஜராகி விளக்கம்