கரூர் அருகே 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஸ்டேஷனரி கடைக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


 




கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்டேஷனரி கடையில் பென்சில் வாங்க சென்றுள்ளார்.


அப்போது ஸ்டேஷனரி கடையை நடத்தி வரும் நடராஜன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடையை அடித்து நொறுக்கி உள்ளனர். அதனை தொடர்ந்து வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வெள்ளியணை போலீசார் நடராஜனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




 


குளித்தலை அருகே இந்து அறநிலை துறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றான் மர்மன் நபர்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கரூர் மாவட்டம் குளித்தலை அருகே போதுராவுத்தன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான  அங்காள பரமேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து 30,000 ரூபாயை திருடி சென்றனர்.


 


 




 


கோவிலில் இருந்து வேலை எடுத்து வந்து கோவில் உண்டியல் உடைத்தனர். அப்பொழுது  அலாரம் சத்தம் கேட்டன அதனை கண்ட மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை மாட்டும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். அருகில் இருந்த பொதுமக்கள் அலாரம் சத்தம் கேட்டு கோவிலில் வந்து பார்த்த பொழுது மர்ம நபர்களால் உண்டியல் உடைக்கப்பட்டது என தெரிய வந்தது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் இந்து அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.