திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழனிஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பரசுராமன் மகன் கோதண்டம். இவருக்கு குமாரி என்ற மனைவியும் பாஸ்கர் சுரேஷ் என்ற 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேலும் கோதண்டம் என்பவர் பட்டு சேலை வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் உள்ளிட்டவைகள் தொழில் செய்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் மாவட்ட அவைத் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி செய்யார் சென்று விட்டு வருவதாக கோதண்டம் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பி வரவில்லை என்பதால் ஜனவரி 7ம் தேதி ஆரணி நகர காவல் நிலையத்தில் கோதண்டம் மகன் பாஸ்கர் என்பவர் தனது தந்தை கோதண்டம் காணவில்லை என புகார் அளித்தார்.


 




இதன் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து ஆந்திரா சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். இதனையொடுத்து ஆந்திரா மாநிலம் சத்தியவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெலுங்கு கால்வாயில் ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தன. இதனை விசாரணை செய்த போலீசார் இறந்தது கோதண்டம் என்பவர் தான் என்றும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளது தெரியவந்தன. மேலும் கோதண்டம் என்பவருக்கு ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் உதவியாளராக இருந்தவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரும் சரணவன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு கிடுக்கிடுபிடி விசாரணை செய்தனர்.


 




 


இதில் சரவணனின் டிரைவர் குமரன் என்பவர் ஆரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தார். பின்னர் குமரன் மற்றும் சரவணனை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சரவணன் அளித்த வாக்குமூலத்தில், சரணவனின் சொத்தான 6 ஏக்கர் நிலத்தை கோதண்டத்திற்கு கிரையம் உரிமையை தந்து அதற்காக 1 கோடி ரூபாய் பணமாக சரவணன் என்பவர் பெற்றுள்ளார். நாளடைவில் இருவருக்கும் நட்பு தொடர்ந்த காரணத்தினால் 6 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனை பட்டா போட்டு விற்பனை செய்ய முயன்றனர். இதனால் கோதண்டம் மீது உள்ள கிரையம் உரிமையை ரத்து செய்து கொடுக்குமாறு கோதண்டனிடம் சரவணன்  கேட்டு உரிமத்தை ரத்து செய்து பணத்தை தர மறுத்துள்ளதாக தெரிகின்றன.


 




 


மேலும் தொடர்ந்து தொந்தரவு செய்த கோதண்டம் என்பவரை தீர்த்து கட்ட சரவணன் முடிவு செய்து தன்னுடைய நண்பனும் ஓட்டுனருமான ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை அணுகி உள்ளார். குமரன் என்பவர் சென்னை குன்றத்துர் பகுதியை சேர்ந்த குட்டி (எ) தணிகாசலம் தொடர்பு கொண்டு கொலை செய்ய திட்டம் தீட்டி கொலைக்காக 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி முதல் கட்டமாக 6 லட்சம் ரூபாய் கூலிபடைக்கு சரவணன் வழங்கியுள்ளதாக தெரிகின்றன. இதனையொடுத்து கோதண்டம் என்பவரை பின் தொடர்ந்து சரவணன் குமரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த குட்டி (எ) தணிகாசலம் நேருஜி ஸ்ரீதர் வினோத் வீரமணி உள்ளிட்ட 7 பேர் செய்யார் தாலுகா அலுவலகத்தில் வெளியே வந்த கோதண்டத்தை சென்னை படப்பை பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் இடம் சம்மந்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று கூறி காரில் கடத்தி கொண்டு செய்யார் சென்னை சாலையில் செல்லும் போது திடீரென குட்டி (எ) தணிகாசலம் ஆகியோர் கோதண்டத்தை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளனர்.


 




பின்னர் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு கிராமத்தில் உள்ள தெலுங்கு கங்கை ஆற்று கால்வாயில் சடலத்தை போட்டுவிட்டு சென்று விட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, சரவணன், குமரன், நேருஜி குட்டி (எ) தணிகாசலம் ஆகிய 4 பேர் மீது கொலை வழக்கு பதிந்து கொலைக்காக பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்து செய்யார் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆந்திரா மாநிலம் கூலிப்படையை சேர்ந்த ஸ்ரீதர் வினோத் வீரமணி ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆரணியில் ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் கேட்டு தொந்தரவு செய்த அமமுக நிர்வாகியை காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.