ராஜஸ்தானில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவியை காதலித்த சிறுவன்:
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த யாஷ் வியாஷ் (17). இவர் அதை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை அந்த சிறுவன் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதனை அறிந்த அந்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளானார். பள்ளிக்கு சில நாட்கள் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை:
இதனை அடுத்து, வாட்ஸ் ஆப்பில் தனது காதலி வேறொரு நபரை திருமணம் செய்ய உள்ளதாகவும், இதனால் நான் வருதப்படுவதாகவும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ட ஸில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, 17 வயது சிறுவனான யாஷ் வியாஷ் தன்னைத் தானை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
பின்பு, இதனை அறிந்த பெற்றோர்கள்ள அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்து சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
TN Rain Alert: அடுத்த 3 மணி நேரம்..! 20 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை..! எங்கெல்லாம் தெரியுமா..?
Himachal CM: இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சராக சுக்விந்தர்சிங் இன்று பதவியேற்பு..!