திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள அள்ளிக்கொண்டாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் வயது (39), இவர் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி வயது (32). இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி ஆகிய இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது பகல் 3 மணி அளவில் 4 நபர்கள் கொண்ட கும்பல் அந்தோணிராஜின் வீட்டுக்குள் திடீரென புகுந்துள்ளனர். திடீரென வந்த கும்பல் வேகத்திலேயே கணவன்-மனைவி இருவரின் முகத்திலும் மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி உள்ளனர். அதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள் உமாமகேஸ்வரியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அதன் பிறகு அந்தோணிராஜின் கை, கால்களையும் கட்டிய மர்ம நபர்கள் அந்தோணிராஜியை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் 4 நபர்களும் அந்தோணிராஜை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்தனர்.
பின்னர் அந்த மர்ம நபர்கள் அந்தோணிராஜியின் மனைவி உமாமகேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புகார் நீ செய்தால் உன் கணவரை கொன்று விடுவோம் என மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அதனை பொற்படுத்தாமல் உமாமகேஸ்வரி தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜை கடத்தியவர்களை காவல்துறையினர் தனிப்பட்டை அமைத்து தேடினர்.
அதன் பிறகு காவல்துறையினர் அந்தோணிராஜ் வீட்டில் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியகங்களை பறிமுதல் செய்தும், அந்தோணி ராஜிக்கு முன்விரோதம் உடையவர்கள் உள்ளார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்தோணிராஜை கடத்தி சென்றது திருப்பத்தூர் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் வயது (34), ஜெய் என்ற ஜெகதீசன் வயது (36) மற்றும் சசிகுமார் வயது (20), முனிராஜ் வயது (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தோணிராஜை காவல்துறையினர் மீட்டு 4 நபர்களையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 நபர்களிடம் காவல்துறையினர் எதற்காக அந்தோணிராஜை கடத்தி சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்திற்காக வீடு புகுந்து நகை மதிப்பீட்டாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.