தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த  நாடார்பெட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் சேர்மன்(25).  இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். பின்னர் மாலை  நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர் மகனை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாததால் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர், ஆனால் அவர் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் சேர்மன் ஊர் அருகே உள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கிய படி பிணமாக தொங்கி உள்ளார்.


இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்டது பாலசுப்பிரமணியனின் மகன் சேர்மன் என்பதும் தெரிய வந்ததையடுத்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்து போன சேர்மன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதனை வீட்டில் கூறியதாகவும் தெரிகிறது. ஆனால் அவரது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மனமுடைந்த சேர்மன் தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண