கேரள மாநிலம் மலப்புரம் அருகே திரூரில் 11 மாத குழந்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ஒரு பெண்ணையும் அவரது வாழ்க்கைத் துணையையும் (லிவிங் பார்ட்னர்) போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ்நாடு கடலூரை சேர்ந்த ஸ்ரீபிரியா மற்றும் ஜெயசூர்யன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீபிரியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது கூட்டாளியும் அவரது தந்தையும் சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு உடலை திருச்சூர் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாகக் கூறினார். 


ரயில் விபத்தை தவிர்த்த செங்கோட்டை தம்பதிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் நேரில் பாராட்டு




போலீசார் ஸ்ரீபிரியாவை திருச்சூர் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி, குழந்தை மூன்று மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கைவிடப்பட்டான். இதுவரை, விசாரணைக் குழுவினர் சடலத்தின் எச்சங்கள் எதையும்  மீட்கவில்லை. கடந்த 3 மாதங்களில் திருச்சூர் ரயில் நிலையம் மற்றும் வளாகத்தில் அடையாளம் தெரியாத உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் ரயில்வே காவல்துறை உறுதி செய்துள்ளது. குழந்தை மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து ஸ்ரீபிரியாவின் உறவினர் விஜயா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயசூர்யன் மற்றும் அவரது தந்தையால் குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது.