Crime: சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

சென்னை திருமுல்லைவாயவில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்த்த 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

அவள், தனது தாய் மற்றும் தங்கையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறாள். மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை அவரது தாயார், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Continues below advertisement

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், மகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், தென்றல் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவருக்கு 2 மனைவிகள். இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். வெங்கடேசன், தனது தாயார் விஜயா (65), அக்காள் லலிதா (36) ஆகியோருடன் ஒரே வீட் டில் வசித்து வருகிறார்.

வெங்கடேசன், 10-ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறப்படுகிறது. இதற்கு வெங்கடேசனின் தாயார் மற்றும் சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

மேலும் லலிதா தனக்கு தெரிந்த 3 ஆண்களையும் வீட்டுக்கு வரவழைத்து மாணவியை பாலியல் வன்கொமைக்கு ஈடுபடுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதற்காக 3 பேரிடம் இருந்தும் ரூ.3 ஆயிரத்து 300 பணத்தை லலிதா பெற்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

Watch Video : ஹாலோவின் பார்ட்டி கூட்ட நெரிசல்..! 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்..! தெ.கொரியாவில் சோகம்..

Pondicherry : ஆம்புலன்சில் நோ ஸ்ட்ரெச்சர்..! தள்ளுவண்டியில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன்..! புதுவையில் அவலம்..

P Chidambaram : தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்...! புள்ளிவிவரத்துடன் மத்திய அரசை விளாசிய சிதம்பரம்..