Crime : உத்தர பிரதேச மாநிலத்தில் காதலி மிரட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் காவல்நிலையத்திற்குட்பட்ட பர்வார் பஸ்சிம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார் (24). இவர் கடந்த சனிக்கிழமை காலை வேலைக்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர், மோகன்லால்கஞ்ச் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்று, மரத்தில் தூக்குப்போட்டு உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசார் திலீப் குமாரின் செல்போனையும், ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசார் கூறுகையில், ” தற்கொலை செய்துகொண்டது பர்வார் பஸ்சிம் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் முடிந்தது. பிப்ரவரி 20ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருன்றனர்.
மேலும், சம்பவத்தன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, "நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். ஆனால் அந்த பெண் வீட்டிலும் என் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துவிட்டது. அதனால் எனது காதலி தன்னை திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால், அந்த பெண் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நீ என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்நிலையத்தில் பொய் புகார் அளிப்பேன் என்று மிரட்டினார். எனக்கு வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திலீப் குமாரின் காதலியான மோனா என்ற பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Crime: பாலியல் அத்துமீறல்... இளைஞரை மிகத்திறமையாக போலீசிடம் சிக்க வைத்த சிறுமி .. நடந்தது என்ன?