பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சவூதி அரேபியாவில் தான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார்.


உத்திரப்பிரதேச மாநிலத்தைச்  சேர்ந்த அனுராக் காஷ்யப், 1993 ஆம் ஆண்டு சினிமா கனவுகளுடனும் ரூ.5 ஆயிரம் பணத்துடன் மும்பை வந்திறங்கினார். ப்ருத்வி தியேட்டரில் நாடகம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு  கிடைத்த நிலையி நாடக இயக்குநரின் மரணத்தால் பாதியில் நின்றுவிடுகிறது. இதன் பின்னர் சீரியல்களுக்கு கதை எழுதுவது என நகர்ந்த அனுராக்கின் வாழ்க்கை நடிகர் மனோஜ் பாஜ்பாய் மூலம் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் அறிமுகம் கிடைத்தவுடன் தலைகீழாக மாறிப்போனது. 


1998 ஆம் ஆண்டு சத்யா படத்திற்கு வசனம் எழுதுவதன் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த அனுராக்கிற்கு அந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.  பின்னர் பிளாக் ஃப்ரைடே, நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமன், தேவ் டி, அகிரா, பதாய் ஹோ, குலால், மும்பை கட்டிங், தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசெஃபூர் பாகம் 1 மற்றும் 2, பாம்பே டாக்கீஸ், அக்லி, பாம்பே வெல்வெட், ராமன் ராகவ் 2.0, மேட்லி, முக்காபாஸ், லஸ்ட் ஸ்டோரிஸ், மன்மர்ஷியான், கோஸ்ட் ஸ்டோரிஸ் ஆல்மோஸ்ட் பியார் வித் டி.ஜே. மொஹபத் என ஏகப்பட்ட படங்களை அனுராக் இயக்கியுள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும் நடித்து அனைவரையும் மிரள வைத்தார். 






பாலிவுட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அனுராக் சவூதி அரேபியாவில் தான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், எரிமலை வெடிப்பு காரணமாக டென்மார்க்கில் இருந்து அந்நேரம் விமானம் எதுவும் இயங்கவில்லை. மிகவும் சோர்வாக இருந்த நான் ஓய்வெடுக்கும் அறைக்குச் சென்று மது அருந்தினேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு சுமார் 5 மணி நேரம் அங்கு காத்திருந்தேன். பின்னர் விமானம் புறப்பட்டவுடன் என்ன நடந்தது என்ன தெரியாமலேயே போதையில் சவூதி அரேபியாவில் இறங்கியதும் போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.


ஆனால் என்னிடம் அதிர்ஷ்டவசமாக மொபைல் போன் இருந்ததால், அதிலிருந்து இந்திய தொழிலதிபர்ரோனி ஸ்க்ரூவாலாவுக்கு மெசெஜ் அனுப்பினேன். எனக்கு என்ன பயம் என்றால் டென்மார்க்கில் இருந்து வரும் போது பன்றி இறைச்சியை கொண்டு வந்தேன். அதனால் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. மேலும் சவூதியில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்லவிருப்பதை கூறி அதிகாரிகள் தன்னை அழைத்துச் செல்ல வந்ததையும் அனுராக் நினைவு கூர்ந்தார். 


அப்போது சவூதி விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. விமான ஊழியர்களும் நான் இல்லாமல் செல்ல மறுத்ததால் கிட்டதட்ட 3 மணி நேரம் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது என அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.