ரூ.5 ஆயிரம் தர மறுத்த தாய்:


பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு (20). இவரது தாயார் பிரதிமா தேவி (43). இவர்கள் இருவரும் ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.  தாய் பிரதிமா தேவி அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி தாயிடம் 5,000 ரூபாய் கேட்டுள்ளார் ஹிமான்ஷு. ஆனால், பணம் இல்லை என்று தாய் பிரதிமா தேவி கூறியுள்ளார். ஆனால், தனக்கு பணம் வேண்டும் என்று தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், தாயின் கழுத்தை நெரித்து ஹிமான்ஷு  கொலை செய்திருக்கிறார். 


பின்பு, தாயின் உடலை என்ன செய்வதன்று தெரியாமல் சிறிது நேரம் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்திருக்கிறார். பின்னர், ஹன்சி ரயில் நிலையத்தில் இருந்து காசியாபாத் செல்லும் ரயிலில் ஏறி பிரயாக்ராஜுக்கு வந்துள்ளார். அங்கு திரிவேணி சங்கமத்தில் உடலை வீச முடிவு செய்ததாக தெரிகிறது. அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு ஹிமான்ஷு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  


தாயை கொடூரமாக கொன்ற மகன்:


இதனால், அவரை பிடித்து சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், ஹிமான்ஷு கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, தாயிடம் ரூ.5,000 கேட்டதாகவும், அதை, அவர் தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தரகஞ்ச் போலீஸ் குழு விசாரணைக்காக ஹிமான்ஷு அணுகியது. அப்போது அவர் வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், ஹிமான்ஷு தனது தாயை கொன்றதை ஒப்புக்கொண்டார். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பீகாரில் வசிக்கும் ஹிமான்ஷுவின் தந்தை மற்றும் சகோதரிக்கு சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார். 




மேலும் படிக்க


Bus Accident: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: அப்பளம் போல் நசுங்கிய வாகனத்தின் முன்பகுதிகள்! - 2 டிரைவர்கள் பலி


மனைவியை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்ற கணவர் விபத்தில் உயிரிழப்பு; . சினிமாவில் வருவது போல் அடுத்தடுத்து நடந்த சம்பவம்r