Crime : காதலன், வீட்டிற்கு வராத ஆத்தரத்தில் அவரது குடும்பத்தினரை கத்தியால் குத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லாக்கான் பாதன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து குவாலியர் பகுதியில் ஒரு வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்தனர். இவர்களது காதலுக்கு அவரவர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவீட்டாருக்கு சண்டை ஏற்பட்டது போல் தெரிகிறது. இந்நிலையில் ராம் லாக்கான் பாதன் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அந்த பெண் அவரது காதலனின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தும் பதிலளிக்கவில்லை. அந்த பெண்ணுக்கு தனது காதலன் அவரது வீட்டில் இருப்பதாக யோசனை செய்தார். அவர்கள் குடும்பத்தினர்தான் ராம் லாக்கன் பாதனை மறைத்து வைத்திருப்பதாக அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது காதலன் வீட்டிற்கு சென்று அவரது தாயிடம் கேட்டுள்ளார். அவர்கள் தெரியாது என்று கூற இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண் தான் வைத்திருந்தத கத்தியால் அந்த நபரின் தாயின் கழுத்தில் குத்தி உள்ளார். இதனை தடுக்க வந்த அந்த நபரின் தந்தைக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் காணாமல் போன அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
ஆந்திரப்பிரதேசத்தில் தான் சமைத்த உணவால் கணவனை கொலை செய்ததாக பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி தனது கணவர் மாயமானதாக வான்கா ஜோதி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி காவல்துறையில் புகாரளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜோதி என்ற பெண் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விஷயம் கணவருக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, , டிசம்பர் 29 ஆம் தேதி வழங்கப்பட்ட உணவில் மயக்க மருந்தை கலந்துள்ளார். இதில் மயங்கிய ராஜூவை அவர் ஸ்ரீனிவாச ராவ் உடன் இணைந்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனை போலீசார் கண்டிபிடித்ததை அடுத்து அந்த பெண் மற்றும் அவர் உடன் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க
Crime: சாப்பாடு மூலம் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி...! சதித்திட்டம் அம்பலமானது எப்படி...?