Crime : மத்திய பிரதேசத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் தாயே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குஷ்வாஹா பகுதியை சேர்ந்தவர் மம்தா (41). இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் இருவரும் குஷ்வாஹா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். 17 வயதான அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அவர் தாய் இதுகுறித்து கண்டித்துள்ளார். பலமுறை இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தாய் சொல்வதை கேட்காமல் அந்த சிறுமியானது அந்த நபருடன் வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அப்படி ஒரு இருவரும் வெளியே இருக்கும்போது அவர் பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதுகுறித்து 17 வயது சிறுமி காதலித்து வந்த நபரிடம் கூறியுள்ளார். இதனால் இருவரும் மம்தாவை கொலை செய்ய திட்டமிட்டனர். திட்டமிட்டப்படி ஒரு நாள் சிறுமி வீட்டிற்கு அந்த நபர் வந்தார். பின்னர், மம்தாவை கழுத்தை நெறித்து, கத்தியால் அவரை பலமுறை குத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு, அந்த இடத்தைவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கழிவறையில் இருந்த மம்தாவை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு, இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர். அப்போது தலைமறைவாக இருந்த 17 வயது சிறுமி மற்றும் அவரது காதலனை நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்பு, இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ததில் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "அந்த நபர் ஏற்கனவே ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிறையில் இருந்துள்ளார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தற்போது இந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமியின் தாய் மறுப்பு தெரிவித்ததால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்" என தெரிவித்தனர்.
மேலும் படிக்க
Crime: வேகமாக மோதிய கார்; 12 கிலோ மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; புத்தாண்டில் பரிதாப பலி..!