கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவியலர்களுக்கு தற்காலிகமாக மாற்றுப்பணி வழங்கப்படும் என்றும், நிரந்த பணி வழங்கும் வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


கொரோனா காலத்தில் பணி அமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தபட்டனர். அவர்களுக்கான பணி ஒப்பந்தம் கடந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்ததுள்ளது.


இந்நிலையில், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்று செவியர்களும், தமிழ்நாடு அரசின் அறிவிப்பு எதிராக பல்வேறு கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், இந்த விசயம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதன் விவரம்:


உலகம் முழுவதும் பரவி வரும் BF.7 ஒமைக்ரான் ரக கொரோனா தொற்று பற்றிய கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் BF.7 ஒமைக்ரான் ரக கொரோனா தொற்று இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.


பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென செவிலியர்களின் கோரிக்கை மற்றும் அது தொடர்பாக பேசிய அமைச்சர், “ ஒப்பந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்.  4,308 பணியிட்டங்களுக்கு இப்போது எம். ஆர். பி. தேர்வுகள் நடைபெற்று  வருகிறது. மனிதபிமான அடிப்படியில் 2366 க்கு பணி பாதுகாப்பு எனும் பெயரில் நியமிக்கபட உள்ளனர். அம்மா கிளினிக் பணியாளர்களுக்கு  மெரிட் மார்க் கொடுக்க சொல்லி உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.