Crime: திருமணம் நிச்சியிக்கப்பட்ட நபருடன் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணை 5 பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. அதனை தொடர்ந்து, தற்போது ஜார்க்கண்ட மாநிலத்தில் ஒரு பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண்:


ஜார்க்கண்ட் மாநிலம்  மேற்கு சிங்குபம் பகுதியில் உள்ள பரிஜால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அதே பகுதியைச் சேர்நத் நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணத்திற்கு இன்னும் சில  மாதங்களே உள்ள நிலையில், ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, சிங்குபம் பகுதியில் நேற்றுமுன் தினம் இரவு 22 வயதான பெண், தனக்கு திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருக்கிறார். பின்பு, இரவில் இவர்கள் இருவரும் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.


அப்போது,  இவர்களுக்கு எதிரில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மதுபோதையில் நின்றுக் கொண்டிருந்தது.  பின்னர், இவர்களை பார்த்த அந்த கும்பல் தகராறில் ஈடுபட்டது. இதனை தடுக்க முயன்ற அந்த நபரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.


பாலியல் வன்கொடுமை:


இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்தார். பின்பு,  அந்த பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து பணம் மற்றும் நகை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது.


இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபர் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார்  அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்பு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அவர்கள் 5 பேரை அடையாளம் கண்டு, கைது செய்தனர். வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண்ணை 5 பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க 


Crime: பெண் போலீஸை கொடூரமாக தாக்கிய நபர்; சுற்றி வளைத்து போட்டு தள்ளிய போலீஸ் - உ.பி.யில் அதிரடி


Crime: உறவினர்கள் கண்முன்னே.. 3 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டூழியம்!