கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த தோகைமலை தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 29,625 ரொக்க பணம் மற்றும் 5 இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.




கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டதில் பணம் வைத்து சூதாட்டம் நடத்திவந்தது தெரியவந்தது. 




அதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தோகைமலையை சேர்ந்த செல்வம் (40), மகேஸ்வரன் (34), தினேஷ் (26), ராக்கம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (52), சங்காயிபட்டியை சேர்ந்த சரவணன் (40), விஜயன் (36), பழனிச்சாமி (42), நாடக்காப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (35), உப்பிலியப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (33), வடிவேல் (45), கன்னிமார்பாளையத்தை சேர்ந்த குமரேசன் (30) ஆகிய 11 பேரை பிடித்த தனிப்படை போலீசார் தோகைமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.




அதனையடுத்து அவர்களிடமிருந்த10 செல்போன்கள், ரொக்க பணம் ரூ.29,625, மற்றும் 5 இரு சக்கர வாகனங்களை தோகைமலை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து  சூதாட்டம் நடத்திய ஏஜன்ட் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குபதிந்து, அவர்களை குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பிறகு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.


பொது மக்களுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது


கிருஷ்ணராயபுரம், ஏப்ரல் 21 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் இவர் ஆடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று தனது ஆட்டை காணவில்லை என பிச்சம்பட்டி சின்ன வாய்க்கால் பாலம் அருகே கையில் அறிவாலுடன் நின்று கொண்டு, அந்த வழியாக சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரப்பன் வைத்திருந்த அறிவாலை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மது விற்றவர் கைது


கிருஷ்ணராயபுரம்,ஏப்ரல் 21 கரூர் மாவட்டம் லாலாபேட்டை போலீசார் லாலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஜெகன் முத்துராமலிங்கம் தாலியம்பட்டி நான்கு ரோடு அருகே மது பாட்டில்களை படிக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்த அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விவசாயிக்கு கட்டிக்குத்து நில புரோக்கர் கைது


தாலுக்கா மயிலம்பட்டியை சேர்ந்தவர் வீரமலை விவசாயி .இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சங்கி பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த நில புரோக்கர் வீரமலை என்பவர் விவசாயி வீரமலையிடம், நான் வாங்கும் நிலத்தை விற்க விடாமல் கொடுக்கிறாயா என்று ஆபாச வார்த்தைகளால் பேசி, கத்தியால் வீரமலையின் நெஞ்சில் குத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த விவசாயி வீரமலை சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிந்து நில புரோக்கர் வீரமலையை கைது செய்தார்.