தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான T-87 எண் கொண்ட பேருந்து , காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மற்றும் நடத்துனர், சாரங்கன் மற்றும் சில பயணிகளுடன் கண்ணன்தாங்கள் கிராமத்திற்கு  செல்லும் வழியில், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சந்திப்பு வளைவில் திரும்பிய போது போக்குவரத்து நெரிசலால் நின்றிருக்கிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பேருந்தினை மடக்கி ஆர்ன் அடித்தால் வழிவிட முடியாத என கேட்டிருக்கின்றனர்.

 


 

மேலும் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால், பேசிய நிலையில், நடத்துனர் அந்த மூன்று இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில், வைத்திருந்த பட்டாக்கத்தியை கொண்டு பேருந்தின்  கண்ணாடி முன் பக்க கண்ணாடி மீது, பட்டதால் பேருந்து ஓட்டுநர் அச்சத்திலேயே அதிர்ந்து போனார். இதனை அடுத்து பேருந்தில் இருந்த, பயணிகள் அனைவரும் அச்சத்தில் கதறி பேருந்து விட்டு இறங்கி ஓடியுள்ளனர். அதற்குள் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்ததால் அந்த போதை இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.


 

 

சிவகாஞ்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்து நிலையில், மூன்று பேர் மீது, அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி, அரசு பொது சொத்தை சேதப்படுத்தியது, பொதுமக்கள் கூடும் இடத்தில் பொதுமக்களுக்கு அச்சம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, காஞ்சிபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன், தியாகராஜன் மற்றும் சிவா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். காஞ்சிபுரம் ரயில் தண்டவாளம் பகுதியில், பதுங்கிருந்தவர்களை கைது செய்ய சென்ற பொழுது தியாகராஜன் என்கிற சரவணன் தப்பி ஓட முயற்சி செய்த பொழுது கீழே விழுந்து அவருடைய வலது கை உடைந்தது. 



 

மற்றொரு சம்பவத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படப்பையை அடுத்த ஆரம்பாக்கம்  செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (26) , அலெக்ஸ் (25),  ஆரம்பக்கம் ஆகியோரை பிடிக்க தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் IPS  உத்தரவின்பேரில்,  தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி IPS  மேற்பார்வையில்,  மணிமங்கலம் சரக காவல் உதவி ஆணையர் ரவி, தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் போலீசாரின் வாகன சோதனையின்போது, மேற்கண்ட குற்றவாளிகளை மணிமங்கலம் காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

 



 

போலீசாரை கண்டதும் மேற்கண்ட குற்றவாளிகள் ஒட்டம் எடுத்ததில், அலெக்ஸ் என்பவருக்கு கையிலும் பாலாஜிக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளிடமிருந்து 2 பட்டாகத்திகள், இரண்டு செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளை மடக்கிப் பிடித்த தனிப்படையினரை தாம்பரம் காவல் ஆணையாளர் பாராட்டினார்.