மும்பை நரிமன் பாயிண்டில் உள்ள தனியார் ஓட்டலில் சி.ஐ.ஐ. தங்கச்சங்கிலி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், அதன் முழுமையான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரவலுக்கு வலுவான விநியோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வாழை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வாழை வர்த்தகச் சுற்றுச்சூழலில் விநியோக சங்கிலி முலமாக செயல்பட்டதற்கும் ஒருங்கிணைந்த சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விருது வழங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா மாநில கவர்னர் வழங்கி பேசுகையில், விவசாயத்தில் சிறந்த குளிர்பதன வசதிகள், உண்மையில் அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்கும், விவசாயிகளுக்கு சிறந்த வருமானம் மற்றும் நாட்டிற்கு செழிப்பை வழங்குவதற்கும் மிகவும் முக்கியமானது என்று கூறினார். தேசிய மழைநீர் ஆணையம் மற்றும் விருதுக் குழுவின் நடுவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அசோக் தல்வாய், தொடர்ந்து வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு ஆகியவை வலுவான குளிர் சங்கிலி மற்றும் விரிவான இணைப்புகளுடன் கூடிய சிறந்த தளவாடங்கள் மூலமாக சாத்தியமாகும் என்று விளக்கினர்.






திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர், முனைவர் எஸ். உமா கூறுகையில், சுமார் ரூ.700 கோடிக்கும் குறைவான மதிப்புள்ள அளவிலேயே வளைகுடா நாடுகளுக்கு வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரியான கொள்கை, தரமான உற்பத்தி மற்றும் விரிவான விநியோகச் சங்கிலி இருப்பதன் மூலம், இந்த ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்குக்கு உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாழை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வாழை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுக்கு இந்த மையம் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கி வருவதால் இந்த விருது அனைவருக்கும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும் என்றார். விழாவில் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள், நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைதல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய காலநிலை கண்டுபிடிப்புகள் குறித்த தொழில்நுட்ப அமர்வுகளும் நடத்தப்பட்டது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.