Crime : குஜராத்தில் பெண் ஒருவரை அவரது காதலனே கொடூரமாக கொலை செய்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக அவர்கள் தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் அவர்களை தாக்குகின்றனர். இந்நிலையில், தற்போது ஒரு குஜராத்தில் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் நிகுன்ஞ் குமார் (29). இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி முதல் மனைவியுடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் சூரத் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் நிகுன்ஞ் குமார். அந்த பெண்ணிடம் தனக்கு ஏற்கனவே திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வருவதை சொல்லாமல் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் நிகுன்ஞ் குமாரை காதலித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே நிகுன்ஞ் குமாருக்கு திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதனால் நிகுன்ஞ் குமாரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் உன்னால் ஏமாற்றப்பட்டேன். இனி என்னுடன் பேசாதே என்று கூறிவிட்டு அவரிடம் இருந்து விலகியுள்ளார்.
இதனால் நிகுன்ஞ் குமார் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர், சில நாட்கள் கழித்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரி தன்னிடம் மீண்டும் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததை அடுத்து நிகுன்ஞ் குமார் கோபத்தில் இருந்துள்ளார். பின்னர், அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார். அப்போது அந்த பெண்ணை தனியாக அழைத்து கேபிள் வயர் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், அவரை தாக்கி வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டுள்ளார். அதோடு இல்லாமல் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி டார்ச்சர் செய்துள்ளார்.
இது குறித்து வெளியே சொன்னால் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் எனக் கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனை அடுத்து, அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், நிகுஞ்ச் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, டார்ச்சர் செய்து கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் ஒருவரை அவரது காதலனே கொடூரமாக கொலை செய்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க