Crime : வாயுக்களை சுவாசித்து இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக  மாநிலம் பெங்களூரு மகாலட் சுமிலே-அவுட் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஜயகுமார் (51).  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமார் இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால்  அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இந்த பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்றும் குணப்படுத்த முடியவில்லை என்ற கவலை அவருக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இதனால் கடந்த சில நாட்களுக்கு முன், தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். ஆனால் வலி இல்லாமல் உயிரிழப்பது எப்படி என்று சிந்தித்து கொண்டே இருந்தார். இதற்காக வலைதளங்களில் தேடியுள்ளார். அப்போது  பூட்டப்பட்ட அறையில் முகத்தை மூடி ஒருவிதமான கேஸ் மூலமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார் விஜயகுமார்.


இதனை தொடர்ந்து விஜயகுமார், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது, குருபரஹள்ளி பைப்லைன் சாலையில் உள்ள பூங்கா முன் சாலையோரம் காரை நிறுத்தினார். அதன்பின், அவ்வழியாக சென்ற ஒருவரிடம், காசு கொடுத்து கார் கதவை லாக் செய்யும்படி கூறியுள்ளார். பின்னர், கார் கண்ணாடிகளை மூடிவிட்டு, கேஸை பயன்படுத்தி மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார்.  விஜயகுமார், இறப்பதற்கு முன் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், "இதய நோயுடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என கூறியுள்ளார். அதற்கு, ஆறுதல் கூறிய அவரது மனைவி, தற்கொலை முடிவு வேண்டாம். வீட்டுக்கு வந்தால், நாம் பேசி அதற்கான நல்ல தீர்வை எடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)