யார் இந்த முக்தா திலக்?


மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முக்தா திலக் (57). ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2019-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மகாராஷ்ரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவர் சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தி ஆவார். முக்தா திலக்கிற்கு கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். புனே மேயராக 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் வரை பணியாற்றினார். மேயர் பதவியை வகித்த பாஜகவின் முதல் உறுப்பினர் திலக் ஆவார். 


இவர்  5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இருந்த போதிலும் அதற்காக சிசிக்சை பெற்றுக் கொண்டே கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்ஏல்ஏவான இவர் புனே நகர மேயர் பதவியையும் அலகரித்தார்.   கடுமையான நோயால் அவதிப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக திலகர் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். 


மரணம்


இந்நிலையில், சமீபத்தில் இவருக்கு புற்று நோய் பாதிப்பு அதிகமானது. இதனால் இவரால் கட்சியில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு அரசியல்  தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


பிரதமர் மோடி இரங்கல்


பாஜக எம்எல்ஏ முக்தா திலக்கின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.






இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” சமூகத்திற்கு  விடாமுயற்சியுடன் சேவை செய்த அவர், மக்கள்  பிரச்சனைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பாஜக மீதான அவரது அர்ப்பணிப்பு எப்போது சிறப்பானதாக இருக்கும். அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்தார்.


அரசியல் தலைவர் இரங்கல்






முன்னாள் மேயரும், கஸ்பா பெத் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான திருமதி முக்தா திலக் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவரது மரணம் புனே நகரின் சமூக மற்றும் அரசியல் துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று மகராஷ்டிரா முதலவர் ஏக்நாத் ஷிண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.