Crime :டெல்லியில் இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லி : தென்மேற்கு டெல்லி பாலம் நகரில் உள்ள ஒரு வீட்டில் தம்பதி தினேஷ்(50), தர்சனா, அவரது மாமியார் தேவி (75), மகள் ஊர்வசி சைனி (18), மகன் கேசவ் (25) ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் தினேஷின் மகனான கேசவ் மது போதைக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு தான் வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு நிரந்தரமான வேலை கிடைக்காத மன உளைச்சலில் அவர் மது குடிப்பதாக கூறப்படுகிறது.


இதனால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதை அடுத்து அவரை  மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு 3 மாத காலம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு கேசவ் வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் தனது குடும்பத்தினருடன் மீண்டும் தகராறு செய்துள்ளார். பின்பு, வெளியே சென்று மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களிடம் தகராறில் ஈடுபட்ட அவர், பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் தர மறுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது தந்தை தினேஷ் உட்பட குடும்பத்தினர் 4 பேரையும் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளார்.  வீட்டில் பயங்கர சத்தம் கேட்டவுடன் அக்கம் பக்கத்தின்ர அங்கு ஓடிச் சென்றனர். 
 
அப்போது வீட்டில் கேசவனின் தந்தை தினேஷ், தாய் தர்சனா, பாட்டி தேவி, மகள் ஊர்வசி என நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் தரை பகுதியில் ஒரு பெண், குளியலறையில் 2 பேர் உள்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்பு, உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதற்கிடையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய கேசவை அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் அந்த இளைஞரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இளைஞர் கேசவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


Delhi Case: ”துண்டு துண்டா வெட்டிடுவேன்...” 2020லயே அப்தாப் மீது புகார் அளித்த ஷர்த்தா..! டெல்லி கொலை வழக்கில் புதிய திருப்பம்