நாள்: 12.07.2022


நல்ல நேரம் :


காலை 7.15 மணி முதல் 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை


குளிகை :


மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் – வடக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களேஇந்த நாள் உங்களுக்கு சற்று குழப்பமான நாளாக அமையும். நீண்ட நாள் நீடித்துவந்த பிரச்சினை முற்றும். எந்தவொரு பிரச்சினையையும் அமைதியாக எதிர்கொள்வதே சிறப்பு. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வணங்கி சிறப்பு காணலாம்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு அமோகமான நாள் ஆகும். குடும்பத்தில் நீடித்து வந்த குழப்பங்கள் அகலும். தொழிலில் வெற்றி கிட்டும். நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் வசூலாகும். எதிர்பாராத லாபம் வியாபாரத்தில் கிட்டும். தொழிலுக்காக நீண்ட தூர பயணம் செல்லலாம்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள் ஆகும். சுற்றத்தார் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்கள் பெருமை அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த அங்கீகாரம் கிட்டும். குடும்பத்தில் நன்மைகள் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் உண்டாகும். 


கடகம் :


கடக ராசி நேயர்களேஇந்தநாள் உங்களுக்கு தெளிவு உண்டாகும். பிள்ளைகள் வழி ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்களுக்கான தொடக்க நாளாக அமையும். வரன்கள் வாயில் தட்டும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணிகளில் ஊதிய உயர்வு கிட்டும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இந்தநாள் சற்று சிரமமான நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடும் போட்டி நிலவும். பிள்ளைகள் இடைேய இருந்த மனக்கசப்பு பெரிதாக வாய்ப்பு உள்ளது. இதனால், குடும்பத்தில் சலசலப்பு உண்டாகலாம். அடுத்தவர் கடனுக்கு உத்தரவாதம் அளிக்காதீர்கள். நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் கவனம் தேவை.


கன்னி :


கன்னி ராசி நேயர்களேஇந்தநாள் நீங்கள் பணிவுடன் காணப்படுவீர்கள். மன அமைதி கிட்டும். அலுவலக காரியங்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே பாதி நிம்மதி. காசி விஸ்வநாதர் வழிபாட்டால் வழிபிறக்கும். பணவரவு உண்டாகும். புதிய வாய்ப்புகள் பிறக்கும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு நன்மைகள் நிறைந்த நாள் ஆகும். வேலைவாய்ப்பில் வெற்றி கிட்டும். நீண்ட நாள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குடும்ப சுமை குறையும். பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் கிட்டும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். மிகவும் ஆரோக்கியமான சம்பவங்கள் உங்கள் வாழ்வில் அரங்கேறும். நீண்ட நாளுக்கு பிறகு புத்துணர்ச்சி அடைவீர்கள். பால்ய சிநேகிதர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதில் அமைதி உண்டாகும். நிம்மதியான நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களேஇந்த நாள் நீண்டநாள் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். குடும்ப பகை நீங்கும். வழக்குகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகமாகும். கவனத்துடன் இருக்க வேண்டும்.


மகரம் :


மகர ராசி நேயர்களே உங்கள் மன உறுதி காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம். அக்கம்பக்கத்தினர் மத்தியில் நன்மதிப்பு அதிகரிக்கும். குழந்தைகள் மீதான அன்பு அதிகரிக்கும். காதல் கைகூடும். சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். மங்கல ஓசை இல்லத்தில் ஒலிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களேஇந்த நாள் உங்களுக்கு மனநிறைவு உண்டாகும். சகோதரி வழியில் உங்கள் கடமையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நன்மைகள் நிறைந்த நாள். எம்பெருமான் ஈசனின் ஆசி கிட்டும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். காதல் திருமணத்தில் முடியும். தந்தை வழியில் நன்மைகள் அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்பு கிட்டும். சுற்றுலா செல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


மேலும் செய்திகளை காணABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண