சென்னையில் ’ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு’ என்ற பெயரில் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி:


முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னை காவல் துறையினர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி புகார் மனு அளித்தார். அவர் அளித்த புகாரில், “ கை நிறைய சம்பளத்துடன் பகுதி நேர வேலை வாய்ப்புள்ளது என்று வாட்ஸ் அப்-லில் தகவல் வந்துள்ளது. இதை நம்பி,  முதலில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் அவர்களின் 2 வங்கி கணக்குகளுக்கு ரூ.18 லட்சத்துக்கு 23 ஆயிரத்தை டெபாசிட் செய்தேன். ஆனால், அவர்களிடம் இருந்து வேலைவாய்ப்பு குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. “ என்று தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு சைப்ர் கிரைம் காவல் துறையினர், இந்த வழக்கில் 5 பேரை கைது செய்து அவர்களின் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர்.  இந்த வழக்கில் சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த டார்லா பிரவீன் குமார், அண்ணாநகர் கிழக்கு  அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ராஜூ, அசோக்குமார், பிரவீன் குமார் வில்லிவாக்கத்தை சேர்ந்த வீரராகவன் ஆகிய 5 பேரை கைது செய்யப்படனர்.


96 வழக்குகள்:


விசாரணையில் இவர்கள் மோசடி செய்த பணத்தை மலேசியாவில் உள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்பி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களது வங்கி கணக்கில் இருந்த ரூ.10 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதானவர்கள் மீது இதே போன்ற மோசடி வழக்கு மும்பை இஸ்லாபூர் போலீஸ் நிலையங்களில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் பகுதி நேர வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஏற்கனவே 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர். 


காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் அருகே சலூன் கடை‌ உரிமையாளர் உட்பட இருவரை தாக்கி மண்டை உடைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் 15 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

 

காஞ்சிபுரம்  ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சந்தவெளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் வினோத் (31). இவர் குஜராத்சத்திரம் அருகேயுள்ள சாலை தெரு பகுதியில் சலூன் கடை நடத்திவருகிறார். இவருடன் கடையில் அவரது தம்பி முறையான,  சித்தப்பா மகன் கார்த்தி என்பவரும், ஓரிக்கையை சேர்ந்த சிவா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் வினோத் வெள்ளிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு சிறுகாவேரிபாக்கத்தில் அருள் கார்டன் என்கிற பகுதியில் தான் கட்டிவரும் வீட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறிவிட்டு கார்த்திக் மற்றும் சிவாவுடன் சென்றிருக்கிறார்.

 

மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி

 

மூவரும் இணைந்து மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று  கொண்டிருந்த நிலையில், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விநாயகபுரம்  பகுதியில் வைத்து இவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். பின்னர் வினோத் மற்றும் கார்த்திக்-ஐ மூவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி, பின்னர் அருகிலிருந்த சிமெண்ட் பிளாக் கற்கள் கொண்டும், செங்கற்கள் கொண்டும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

 

முதலுதவி சகிச்சைகள்

 

தாக்கலுதலுக்கு உள்ளாகிய இருவரும் இரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்திருக்கின்றனர். இதனையெடுத்து இதனை கண்ட பொதுமக்கள் ஆன்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் முதலுதவி சகிச்சைகள் அளிக்கப்பட்டது.  மருத்துவர்கள் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த நிலையில், தனியார் ஆன்புலன்ஸ் மூலம்  ராமசந்திரா தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

பாலுசெட்டி சத்திரம் போலீசார் ( Baluchetty Chatram  police ) 

 

இச்சம்பவம்‌ குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் எதற்காக தகராறு ஏற்பட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வினோத்,கார்த்திக் ஆகிய இருவரையும் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக கற்களால் தாக்கும் சிசிடிவி வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

 

சலூன் கடை உரிமையாளர் வினோத் மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோரை தாக்கிவிட்டு தலைமறைவாகினர். இது‌ தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டதன் பெயரில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான பிரசாந்த், பிரேம், குட்டி (எ) தினேஷ், ஆகியோரை சம்பவம் நடைபெற்ற 15 மணிநேரத்தில் பாலுசெட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.