Crime : சத்தீஷ்கரில் புதுமணத் தம்பதி, திருமண வரவேற்புக்கு முன்பாக வீட்டு அறையில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிரிஜ் நகரைச் சேர்ந்தவர் அஸ்லம்(24). இவருக்கு கஹ்காஷா பானு (22) என்பவருடன் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது. புதுமணத் தம்பதி தங்களது அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் ஓடிச் சென்றார். அறையின் உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த அந்த கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவரும் மற்றவர்களும் அறை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது அறைக்குள் மணப்பெண்ணும், மணமகனும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை உடைத்து பார்த்த போது இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, புதுமண தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ”கணவன் மனைவிக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடத்திருக்கலாம். அதில் அஸ்லம், மனைவி கஹ்காஷா பானுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழு விசாரணைக்கு பிறகே உண்மை வெளிவரும்" என்று கூறப்படுகிறது. புதுமணத் தம்பதி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தனர். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து தான் புறப்படுவதாக கௌதமிடம், ரச்சனா கூறினார்.
இதற்கு கௌதம் தன்னுடம் இரவு தங்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு அந்த இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் ரச்சனாவை, கௌதம் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு தன்னுடன் தங்க மறுத்த ஆத்திரத்தில் ரச்சனாவை, கௌதம் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். பின்பு அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க
“கன்னத்தில் அறைந்ததால் கோபம் வந்துவிட்டது” - கணவரை 7 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!