Crime: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கார் கண்ணாடியை உடைத்து திருட்டு:


பெங்களூருவில் உள்ள சிக்கஜாலாவில் உள்ள பிரபல கடையான டெகாத்லானில் கடைக்கு நேற்று இரவு 7 மணியளவில் ஒரு குடும்பம் கடைக்கு சென்றது. காரை கடைக்கு முன் நிறுத்திவிட்டு அந்த குடும்பம் கடைக்குள் சென்றிருக்கிறது. அவர்கள் பொருட்களை வாங்கிவிட்டு சுமார் 9.30 மணியளவில் கடையில் இருந்து வெளியே வந்திருக்கின்றனர். அப்போது, காரின்  கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு, காரின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் காரை சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்து பணம், லேப்டாப் என விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. 


இதனால் பதறிப்போன அவர்கள்  இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில்  சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர். பின்னர்,  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.


6 லட்சம் அபேஸ்:


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "மர்ம நபர்கள் நீண்ட நேரம் நோட்டம்மிட்டு கார் கண்ணாடியை உடைத்திருக்கின்றனர். பின்னர்,  அங்கிருந்த ரூ.50,000 ரொக்கம், ஆப்பிள் லேப்டாப், ஆப்பிள் மொபைல் போன், கைப்பை, டிராலி பேக், ஹேர் ட்ரையர், ஷூ உள்ளிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்" என்றனர்.


மாயமான பேருந்து நிறுத்தம்:


கர்நாடகா மாநிலத்தில் தலைநகர் பெங்களூரு மாநகரத்தை இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைப்பார்கள். ஐடி நிறுவனங்களின் தலைநகர் என்று கூட சொல்லலாம். பல ஆயிரம் ஐடி நிறுவனங்கள் உள்ள நகரமாக பெங்களூரு வளர்ந்துள்ளது. இங்கு அவ்வப்போது, விசித்திரமான திருட்டு சம்பவங்களும் நடப்பது சமீபநாட்களாக நடப்பது உண்டு.


சமீபத்தில் கூட வடிவேலு பட பாணியில் கிணற்றை காணவில்லை என்று சொல்வது போன்று இரவோடு இரவாக பேருந்து நிறுத்தத்தையே திருடிச் சென்ற சம்பவம் நடந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஸ்டீல் தூண்கள், மேற்கூரை, நாற்காலிகள் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது.  இதனை தொடர்ந்து தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


 


மேலும் படிக்க


Child Marriage: குழந்தைத்‌ திருமணம்‌ இல்லா தமிழ்நாடு; அனைத்துப் பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க உத்தரவு


Ferry Service: நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து.. கட்டணம் எவ்ளோ தெரியுமா? முழு விவரம்..