Crime : உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மதத்திற்கு மாற மறுத்த காதலியை நான்காவது மாடியில் இருந்து தள்ளி, கொன்ற காதலனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு பிடித்தனர்.


உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் வசந்த கஞ்ச் பகுதியில் துபாக்கா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள காலணில் வசித்து வருபவர் சுபியான். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 19 வயதான நிதி என்ற ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக  காதலித்து வந்துள்ளார். இவர் அழகுக்கலை பயிற்சி படித்து வந்திருந்தார். தினமும் இவர் பயிற்சி வகுப்புக்கு செல்லும்போது சுபியானிடம் பேசுவது வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தினமும் அவர்கள் இருவரும் பழகி கொண்டு வருவதை அவர்கள் இருவரின் வீடுகளுக்கு தெரிய வந்தது. பின்பு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தனது மதமான இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என சுபியான் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.
 
நிதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் சுபியான் அதை ஏற்காமல் மாறியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நிதி மறுப்பு தெரிவித்தத நிலையில், கடந்த 15 நாட்களாகவே நிதியை சந்தித்து இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு, இரு வீட்டாருக்கும் இந்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து, சுபியான் தனது குடும்பத்தினருடன் நிதி வீட்டிற்கு திருமணம் குறித்து பேசியிருந்தார். அப்போதும் மத மாற சொல்ல கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் அந்த இளம் பெண்ணான நிதி கோபத்தில் வீட்டின் மாடிக்கு ஓடியுள்ளார். சுபியானும் பின்னாலேயே ஓடியுள்ளார். பின்பு, மதம் மாறுவது குறித்து இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. அதில் ஆத்திரமடைந்த சுபியான் திடீரென்று நிதியை நான்காவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார். அதன்பின்னர், ஏதோ சத்தம் கேட்டு உள்ளது. அந்த இடத்தை சுபியான் தப்பி ஓடியுள்ளார்.


இதன்பின்பு, தரையில் விழுந்து கிடந்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்பு நிதியை குடும்பத்தினர் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்பு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பின், தப்பியோடிய சுபியான் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.


சுபியானை கண்டுபிடித்து கொடுத்தால் தலைக்கு ரூ.25,000 பரிசு எனவும் அறிவித்தனர். இந்நிலையில், சவுராஹா பகுதியில் பவர் அவுஸ் அருகே அவர் தலைமறைவாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்பு, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனை அறிந்த அறிந்த சுபியான் அந்த இடத்தை விட்டு தப்ப முயன்றார். அப்போது, சுபியானை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் காயமடைந்த சுபியானை அதே கிங் ஜார்ஜ் மருத்து பல்கலைகழகத்தில் சிசிக்சைக்காக அனுமதித்துள்ளர். தனது மதத்திற்கு மாற மறுத்த காதலியை நான்காவது மாடியில் இருந்து காதலன் தள்ளிக் கொன்ற அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.