சென்னையில் தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் ஆப் மூலம் ஆனந்தமாக இருக்க நினைத்து பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி அருகே உள்ள தரமணி நூறு அடி சாலையில் சீத்தாபதி நகரில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியில் இருந்து காவலன் செயலி மூலம் பெண்கள் ஆபத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த விடுதியில் தங்கி இருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், ஒருவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிவதாக தெரிய வந்துள்ளது. அவர் தனது நண்பரோடு இணைந்து ஆப் மூலம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க புரோக்கர் உதவியுடன் இரண்டு பெண்களை புக் செய்ததும் தெரியவந்தது. பின்னர், இந்த ஆப்களை நிர்வகிக்கும் புரோக்கர் அவர்களை கோயம்பேடு வந்துவிடுமாறு கூறியுள்ளார். இரண்டு ஆண்களும் கோயம்பேடு சென்று இரண்டு பெண்களை வேளச்சேரி அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நடைமுறையில், ஒரு பெண்ணிற்கு 11,000 ரூபாய் வீதம் இரண்டு பெண்களுக்கும் 22,000 ரூபாய் அவர்களுக்கு கொடுத்துள்ளனர். இரண்டு அறைகள் அந்த விடுதியில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பெண்களை இரண்டாவது முறை உறவிற்கு அழைத்தபோது அவர்கள் வர மறுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அப்போது, உதவிப் பேராசிரியர் வலுக்கட்டாயமாக பெண்களிடம் நடந்துகொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் அச்சம் அடைந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். அவரிடமிருந்து தப்பி சென்றுள்ளனர். தன்னைக் காப்பாற்றி கொள்ள, காவலன் செயலி மூலம் ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும், காப்பாற்ற வேண்டுமெனவும் காவல் துறையை அழைத்துள்ளனர். இதனிடையே போலீசார் அவர்களை மீட்டு, அனைவரிடமும் விசாரணை செய்துள்ளனர்.
இதுகுறித்து உதவிப் பேராசிரியரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் இருவரையும் நம்பி ஏமாந்துவிட்டதாக புலம்பியுள்ளார். ஒருநாள் முழுவதும் என்று சொல்லிதான் 11,000 ரூபாய் வாங்கிக் கொண்டனர், ஆனால், இருவரும் எங்களை ஏமாற்றிவிட்டதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். உதவிப் பேராசிரியரிடம் அறிவுறை சொல்லி வீட்டிற்கு அனுப்புள்ளனர், போலீசார்.