Crime: அந்தரங்க புகைப்படங்கள் வெளியான காரணத்தால் பாஜக பெண் நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலை:


அசாமில் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  அங்கு பாஜகவின் கிசான் மோர்ச்சா மாநிலச் செயலாளராக இருந்தவர் இந்திராணி தஹில்தார் (48).  பாஜக வணிகப் பிரிவின் துணைத் தலைவர்,  பொருளாளர் போன்ற பதிவிகளையும் இந்திராணி தஹில்தார் வகித்து வந்தார். கட்சியில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு தலைவராக இந்திராணி வலம் வந்துள்ளார்.


இந்நிலையில், இந்திராணி தஹில்தார் நேற்று கவுகாத்தியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 


வெளியான அந்தரங்க புகைப்படங்கள்: 


இவரது மரணம் தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது. அதாவது, இந்திராணி தஹில்தார், பாஜகவின் மூத்த தலைவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். மூத்த தலைவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதனால் இந்திராணி தஹில்தார் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.


இதனால் அவர் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாஜக பெண் தலைவரின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பாஜக மூத்த தலைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முன்னதாக, நேற்று முன்தினம் உத்தர பிரதேசத்தில் பட்டப்பகலில் பாஜக பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் படிக்க 


Senthil Balaji Custody: நீதிமன்ற காவலில் மீண்டும் புழல் சிறைக்கு திரும்புகிறார் செந்தில் பாலாஜி