Crime : உத்தர பிரதேசத்தில் 9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பெரொலி மாவட்டம் பரடரி பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது குடும்பத்தில் பணப் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது மகளின் படிப்பிற்கான கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது அசோக் குமார் ஒரு நாள் பள்ளிக்கு சென்று படிப்பிற்கான கட்டணத்தை செலுத்த அவகாசம் கோரியுள்ளார்.
இந்நிலையில், அவரது மகளுக்கு நேற்று தேர்வு நடந்தது. அந்த தேர்வில் அவரது மகளை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேலைக்கு சென்ற அசோக் குமார் வீட்டிற்கு வந்தபோது அவரது மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 14 வயது சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ராகுல் பாடி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க
Crime : மிஸ்டுகால் காதலி.. குழந்தையை அவமானமாக நினைத்த விபரீதம்.. சிக்கிய கொடூர தந்தை