நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தெற்கு வள்ளியூரில்  இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் உள்ளது அரசு மதுபானக்கடை. இந்த கடையில் காவலாளியாக தேவராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு வியாபாரம் முடிந்த நிலையில் ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு சென்று விட்டனர். அப்போது இரவு காவல் பணியில் தேவராஜ் என்பவர் இருந்துள்ளார்.  இந்த  நிலையில் நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென மதுபானக்கடைக்கு வந்துள்ளனர். பின்னர் காவல் பணியில் இருந்த தேவராஜை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு கடையின் பூட்டை இரும்பு கம்பி மூலம் உடைத்து கடைக்குள் புகுந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மதுபாட்டில்களை சாக்கு பையில் கட்டி தூக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி உள்ளனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.




முதற்கட்ட விசாரணையில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்த போது காட்சிகள் பதிவாகும் ஹார்டிஸ்க்கையும் அவர்கள் எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது.  இந்த நிலையில் காவல்துறையினர் அருகே உள்ள வேறு ஏதேனும் பகுதியில் சிசிடிவி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதோடு கொள்ளையர்கள் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுபானக்கடையில் இருந்த காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்ற இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண