தமிழ்நாட்டில் இனி வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை அய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக,
20.04.2023 மற்றும் 21.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
17.04.2023 மற்றும் 18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 40.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 40.4 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து திருத்தணி – 39.5 டிகிரி செல்சியஸ், துருப்பத்தூர் – 39.4 டிகிரி செல்சியஸ், சேலம் – 39.7 டிகிரி செல்சியஸ், மதுரை – 39.2 டிகிரி செல்சியஸ், திருச்சி – 39.1 டிகிரி செல்சியஸ், தர்மபுரி – 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்ச 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
வெப்ப அலை தற்போது தமிழ்நாட்டில் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கிய முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே மாதம் கத்திரி வெயில் தொடங்க இருப்பதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.