மைசூர் - தூத்துக்குடி ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல் - ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை - குட்கா கடத்தல் குறித்து தீவிர விசாரணை.

 

பார்சலில் 240 கிலோ எடையுள்ள அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகள்

 

கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரயிலில் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த பார்சலில் 240 கிலோ எடையுள்ள, அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகள் வந்துள்ளது. இதனிடையே திண்டுக்கல் அருகே ரயிலில் ரயில்வே காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மதுரை ரயில்வே நிலைய பார்சல் அலுவலகத்திற்கு அசோக் என்ற பெயரில் இருந்த 4  பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 


 

பார்சலில் புகையிலைகள்

 

இதனையடுத்து 4 பார்சல்களையும் சோதனையிட்டபோது அதில் 240 கிலோ அளவில தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை  இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  பார்சலில்வந்த கணேஷ் புகையிலை பார்சல்களை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர் அதனை உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். மைசூரில் இருந்து 240 கிலோ பார்சலில் கணேஷ் புகையிலை கடத்தப்படது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பார்சல் எங்கிருந்து வந்தது. அசோக் என்ற நபர் யார் என்பது குறித்தும், இந்த புகையிலை மதுரையில் எங்கெங்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த்து என்பது குறித்தும் விசாரணை நடத்தவுள்ளனர்.