மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் 17 வயது சிறுமியை அவரது தந்தையும், மாமாவும் அடித்தே கொலை செய்துள்ளனர். பின்பு ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக அந்த சிறுமியின் உடலை எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


17 வயது சிறுமி


மகாராஷ்டிரா ஜல்னா பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் இருக்கும் அவரது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தபோது அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் வேறொரு நபருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். 


இதனை அறிந்த அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த வாரம் தனது காதலனுடன் அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியே சென்றார். சில நாட்கள் கழித்து அந்த சிறுமி இருக்கும் இடத்தை அவரது பெற்றோர்கள் கண்டுபிடித்தனர். பின்பு சிறுமியை பார்க்க அந்த இடத்திற்கு அவரது பெற்றோர் சென்றனர். காதலித்த நபருடனே திருமணம் செய்து வைப்பதாக சிறுமியிடம் அவரது தந்தை உறுதியளித்ததை  அடுத்து, சிறுமி மற்றும் அவரது காதலன் வீட்டிற்கு திரும்பினர். அனைவரின் முன்னிலையிலும் சத்தியம் செய்த தந்தை, ஜல்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் ஏற்பாடு செய்தார். அந்த திருமணத்தில் இருவீட்டாரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.


வரதட்சணையால் மோதல்


இதனை தொடர்ந்து, இருவீட்டாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.  வரதட்சணை கொடுப்பது தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடைபெறவிருந்த திருமணம் நின்றுவிட்டது. இதனால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்து மண்டபத்தில் இருந்து சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.


கொடூர கொலை 


திருமணம் கடைசி நேரத்தில் நின்றதால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று நினைத்து அந்த சிறுமியை அவரது தந்தை மற்றும்மாமா கடுமையாக அடித்துள்ளனர். இதனை அடுத்து, கடும் கோபத்தில் இருந்து தந்தை சிறுமியின் கழுத்தை வீட்டின் பக்கத்தில் இருக்கும் மரத்தில் தூக்குப் போட வைத்துள்ளார்.
 


இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக சிறுமியின் உடலை ஏரித்துள்ளனர். இதற்கிடையே தனது காதலி மாயமானதாக நினைத்து அவரது காதலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா கைது செய்யப்பட்டனர். 




மேலும் படிக்க


Crime: காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு.. காதலன் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலி..


கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல்… கோட்டயம் மாவட்டத்தில் பறவைகளை அழிக்க உத்தரவு!