மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷதி-ஜெயதேவ் தம்பதியினர். இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக தாங்கள் பெற்றெடுத்த குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
வாழ்க்கையை நடத்தமுடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்த தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியுள்ளனர். அவர்கள் அந்த போனை கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரீல்ஸ் செய்துள்ளனர். குழந்தை காணாமல் போனதை அடுத்து இவர்களின் இந்த திடீர் வளர்ச்சி அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அத்தம்பதியினரிடம் அவர்களின் குழந்தை குறித்து விசாரித்தனர். பணத்திற்காக குழந்தையை விற்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதை தொடர்ந்து போலீசார் குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகியோரை கைது செய்துள்ளனர். அதோடு தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை போலீசார் தேடி வருகின்றனர்.
’ஜெய்தேவ்- ஷதி தம்பதிக்கு 7 வயது மகள் மற்றும் 8 வயது மகன் உள்ளனர். சிறுவனை விற்ற பிறகு அவர்கள் சனிக்கிழமை அன்று சிறுமியையும் விற்க முயன்றதாக கூறப்படுகின்றது. அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததால் போலீசார் விரைந்து குழந்தையை மீட்டதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க,
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு