இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று அதாவது ஜூலை 27ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.
டெஸ்ட் தொடரை போன்று ஒருநாள் தொடரிலும் வெற்றியுடன் தொடக்க வேண்டும் என இந்திய அணி முயற்சிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இரு அணிகளுக்கு இடையிலான புள்ளிவிவரங்கள்:
- இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கடைசியாக 2006 ம் ஆண்டு 4-1 என்ற கணக்கில் வென்றது.
- வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் இரு அணிகள் மோதிய கடைசி பத்து போட்டிகளில், இந்திய அணி 9 முறை வெற்றிபெற்று, ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது.
- 2015 முதல் 2022 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 24 ஒருநாள் போட்டிகளில் 18ல் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி டையிலும், மீதமுள்ள இரண்டு போட்டிகள் முடிவு இல்லாமல் போனது.
- கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மும்பையில் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.
- இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டுமே.
நேருக்குநேர் இதுவரை:
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 139 போட்டிகள் நடந்துள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 63 போட்டிகளிலும், இந்தியா 70 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில், 2 போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், 4 போட்டிகளில் எந்த முடிவும் காணப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்:
ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி
இந்தியா பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்