மனைவியைக் கொன்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
பீகாரின் ஷேக்புரா பகுதியில் சுனில் குமார் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
அவர் ஏற்கனவே நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரைக் கைது செய்வோருக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட கணவர் குமார், அக்டோபர் 18, 2016 அன்று தனது மனைவியைக் கொன்றார், அன்றிலிருந்து தனது நான்கு வயது மகளை தன்னுடன் அழைத்துச் சென்று தலைமறைவாகிவிட்டார்.
ரன்ஹோலா காவல் நிலையத்தில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் (டிசிபி) ஆதித்யா கௌதம் கூறுகையில், “விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அடிக்கடி சண்டைகள் காரணமாக தனது மனைவியைக் கொன்றதாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் கூறினார்.
அவர் டெல்லி, ஃபரிதாபாத், பாட்னா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்ததாக கூறியுள்ளார். மேலும் போலிசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரயில் நிலையங்களிலும், காலணி உற்பத்தி தொழிற்சாலையிலும் வேலை செய்து வந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.