வேலையில்லை என்ற கவலைய விடுங்க... இதோ மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம்...500 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள்...!

மயிலாடுதுறையில் 500 -க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 14 -ம் தேதி நடைபெறுகிறது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வரும் 14.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Continues below advertisement

500 பணியிடங்கள் 

இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த 25 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது நிறுவனத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளன.

இதையும் படிங்க: Zelensky Apology: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?

வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளவர்கள்

5ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ, மற்றும் இதர பட்டதாரிகள்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

முகாமில் வழங்கப்படும் கூடுதல் வசதிகள்

  • திறன் பயிற்சி மற்றும் சுயதொழில் தொடங்க வங்கி கடன் வழிகாட்டுதல்.

 

  • அயல்நாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள்

 

  • அரசுப் போட்டித்தேர்வுகள் குறித்த இலவச வழிகாட்டுதல்

தேவையான ஆவணங்கள்

வேலை தேடும் இளைஞர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

✔️ சுய விவர அறிக்கை (Resume)

✔️ கல்விச்சான்றுகள் நகல்கள்

✔️ ஆதார் அட்டை

✔️ பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

✔️ முன் அனுபவச் சான்றிதழ்கள் (தேவையானவர்கள் மட்டும்)

இதையும் படிங்க: TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு

மேலும், வேலைநாடுநர்களும், வேலை வழங்க விரும்பும் நிறுவனங்களும் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தகவலுக்கு 04364-299790 / 9499055904 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆட்சியர் அழைப்பு 

இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Continues below advertisement