புதுச்சேரியில் சுருக்குமடி வலை விவகாரம் காரணமாக சின்ன வீராம்பட்டினம், நல்லவாடு,  புதுக்குப்பம் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் நடுக்கடலில் ஒருவரின் ஒருவர் படகுகளை கொண்டு மோதி சேதம் ஏற்படுத்தி வருகின்றனர். புதுச்சேரியில் சுருக்குமடி வலை பயன்படுத்தக்கூடாது என ஒரு தரப்பினரும் மீன் வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக ஒரு தரப்பினரும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.




 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசிடம் கேட்கப்பட்ட போது இந்தச் சுருக்குமடி வலை விவகாரம்  தீர்வு காணப்படவில்லை என தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும் புதுச்சேரி அருகே இருக்கக்கூடிய சின்ன வீரம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களும் மற்றும் நல்லவாடு, புதுக்குப்பம் மீனவர்கள் சுருக்குமடி வலை வைத்து மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமத்தில் நல்லவாடு மீனவ கிராமத்தினர் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற மீனவர் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர், இந்த நிலையில் இன்று சின்ன வீராம்பட்டினம் அருகே நடுக்கடலில் சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக நல்லவாடு மற்றும் அரியாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அரியாங்குப்பம் மற்றும் நல்லவாடு இரு கிராமத்தினரும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையோரம் மோதலில் ஏற்படும் வகையில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் குவிந்தனர்.




இதையடுத்து தகவலறிந்த அரியாங்குப்பம் மற்றும் தவளகுப்பம் பகுதியைச் சேர்ந்த காவல் நிலைய காவலர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில் கடற்கரையில் குவிந்து இருந்த மீனவ கிராம மக்கள் கையில் கத்தி, இரும்புக் கம்பி, போன்ற பல்வேறு பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருந்தனர்.



போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி இரண்டு கிராம மீனவர்களும் கடற்கரையோரம் கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் நடுக்கடலில் தொடர்ந்து  மீனவர்கள் படகுகள் மூலம் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கலவரம் அதிகரிக்க தொடங்கியதால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர் கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீனவர்களின் இந்த திடீர் மோதலில் இரண்டு மீனவ கிராமத்திலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அரியாங்குப்பம் மற்றும் சின்ன வீராம்பட்டினம் நல்லவாடு கிராம பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Kodanad Case : நீதிமன்றத்தில் வாக்குவாதம்.. கோடநாடு வழக்கு விசாரணை நடந்தது என்ன? Detail ரிப்போர்ட்