கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்  நகராட்சி செங்குந்தர் 8வது தெருவில்  வசித்து வருபவர் கோவிந்தசாமி. 70 வயதான கோவிந்தசாமியும், அவரது மனைவி வசந்தாவும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்.


கோவிந்த சாமிக்கு இரண்டு மகள்கள், ஒருமகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியை இழந்து வயதான காலத்தில்  தனியாக வசித்து வந்துள்ளார். திடீரென தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், தனக்கு துணையாக யாரவது வேண்டும் என முடிவெடுத்து.  துணைத் தேடி திருமண தகவல் மையம் சென்றிருக்கிறார்.


 




 


திருமண மையத்தில் வரன் வேண்டும் என கேட்டுள்ளார். அவர்கள் முதியவரை பார்த்து பேரனுக்கா?பேத்திக்கா? யாருக்கு வரன் பார்க்கணும். என்று திருமணம் தகவல் மையத்தினர் கேட்க, தனக்குத்தான் பெண் பார்க்கணும் என்று முதியவர் கூறினர். அதிர்ந்து போன திருமண தகவல் மையத்தினர், இதுவரையில் நாங்கள் இதுபோன்று வரன் பார்த்ததில்லை, இருந்தாலும் தங்கள் வேலையை செய்வோம் ,என்று கூறி முதியவரிடம் இருந்து புகைப்படம் மற்றும் விபரங்களுடன் விளம்பரம் செய்தனர். 


சில நாட்கள் கழித்து, தகவல் மையத்தினர் உங்களுக்கு சீர்காழியை சேர்ந்த 49 வயது விஜயசாந்தி என்பவர் தங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று கூறியுள்ளனர். கோவிந்தசாமியிடம் பெண்ணின் செல்போன் நம்பர் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் விஜயசாந்தியிடம் செல்போனில் அவர் பேசியிருக்கிறார்.


 




 


அதனைத்தொடர்ந்து விஜயசாந்தியே, கோவிந்தசாமியின் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளார். மாப்பிள்ளை பார்த்துவிட்டு உடனே செல்லாமல், இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார். வீடடில் தங்கி எங்கெல்லாம் நகை, பணம் உள்ளது என நோட்டமிட்டுள்ளார். பின்னர் கோவிந்தசாமியிடம் என்னுடைய கணவர் விவாகரத்து செய்து இருந்தேன். விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக் கொண்டு வந்துள்ளார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு உள்ளார். மீண்டும் கோவிந்தசாமி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோவிந்தசாமி அசந்த நேரம் பார்த்து , கோவிந்தசாமியின் மனைவி போட்டோவில் மாட்டி வைத்திருந்த 9 பவுன் தாலி செயினை திருடிச் சென்றார். சிறிது நேரம் கழித்து விசயம் அறிந்து, விஜயசாந்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டால்  சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. அவரது ஊரையும் பொய் சொல்லி ஏமாற்றியிருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது.  இதனால் ஏமாந்து போய்விட்டதை மகள்களிடம் சொல்லி புலம்பியிள்ளார் கோவிந்தசாமி.


 




 


இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அன்று சின்னசேலம் பேருந்து நிலையத்தில் கோவிந்தசாமி தன் மகள்களுடன் நின்றிருந்தபோது எதார்த்தமாக அங்கே வந்த விஜயசாந்தி கோவிந்தசாமியிடம் சிக்கினார். அதன் பின்னர் அருகில்  இருந்த போலீசாரிடம் புகார் தெரிவிக்க, விஜயசாந்தியை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.