கோவை கணபதி அருகே காந்திமா நகரைச் சேர்ந்தவர் பவித்ரா. 23 வயதான இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக போன இவர்களது வாழ்க்கையில், ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென மூர்த்தி பலியானார். 


அதன் பின் குழந்தைகளுடன் தனிமையில் இருந்த பவித்ராக்கு, கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. நீண்ட காதல் பயணம், ஒரு கட்டத்தில் திருமணமாக மாற இருவரும் முடிவு செய்தனர். அதன்படி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 


திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கு இடையே தேவையற்ற உரசல்கள் ஏற்பட்டது. திருமணம் ஆன 5 நாளில், காதலர் மணியை பிரிந்தார். அதன் பின் தன் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் பவித்ரா. மகளின் நிலையை கண்ட தாய், அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக வரன் தேடப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்தா காசி விஷ்வா என்பவருடன் பவித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. 




விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக இருந்த நிலையில், நேற்று பவித்ரா குடும்பத்தார் வெளியில் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர்கள், அங்கு பவித்ரா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பவித்ரா மட்டுமல்லாமல், அவரது 4 வயது மகளையும் காணவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.


தேடி பார்த்தும் பலனளிக்காததால், பவித்ராவின் தாய் மங்கலம், கோவை சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், பவித்ரா மற்றும் அவரது 4 வயது மகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இரண்டு திருமணம் பொய்த்து போன நிலையில், மூன்றாவது திருமணத்திற்கு தயாரான பெண், குழந்தையுடன் மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண