விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் உள்ள இடம் ஆரோவில் பேன்டேஷன் இடம் என வெளிநாட்டினரும், தனியார் இடம் என உள்ளூர் வாசிகளுக்கும் பிரச்சினையில் தொடங்கி கைகலப்பு வரை சென்றதால் ஆரோவில்லில் பதற்றமன சூழல் காரணாமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


விழுப்புரம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில் இங்கு பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இங்கு ஆரோவில் ஃபவுண்டேஷன் சொந்தமாக பல நூறு ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. மேலும் அதன் அருகிலும் பல ஏக்கர்கள் தரிசு நிலம் தனியாருக்கு சொந்தமாகவும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை  சேர்ந்த சுப்பிரமணி என்பவர் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த இடம் ஆரோவில்லுக்கு சொந்தம் என சில ஆரோவில் வாசிகள் ( வெளிநாட்டினர்) கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே ஆரோவில் போலீசார் சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


மேலும் வெளிநாட்டினர் ஆரோவில் வாசிகள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆரோவில் வாசிகள் தரப்பில் போதிய ஆதராம் இல்லாததால்  மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் இன்று தனியார்க்கு சொந்தமான இடம் என அவரது தரப்பினர் வேலி அமைக்க முற்பட்ட போது 100க்கு  மேற்பட்ட வெளிநாட்டினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால்  தனியார் இட உரிமையாளர் தரப்புக்கும் ஆரோவில் வாசிகளுக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆரோவில் பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க அதிக அளவிலான  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆரோவில் ஃபவுண்டேஷன் மற்றும் அங்குள்ள வெளிநாட்டவர்களால் அதிக அளவில் தொடர் சர்ச்சையில் ஆரோவில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது.


 




இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர