பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை  செய்ததாக சினிமா குரூப் டான்சரை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சினிமா குரூப் டான்சர் உள்பட 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யாவுடன் பழகியதாக கூறப்படுகிறது. ஜெயசூர்யா தன்னை சினிமாவில் தான் ஒரு குரூப் டான்சர் என்று கூறி பள்ளி மாணவியை நம்பவைத்தார். அதன்பிறகு, அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் காதல் என்ற போர்வையில் மாணவியை அழைத்துச் சென்று தனியார் விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தன்னுடன் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


மேலும் படிக்க: Crime : பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி, தாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. பதைக்கவைத்த அதிர்ச்சி சம்பவம்..


இதனிடையே சிறுமியை காணவில்லை என அவரது தாய் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், விடுதிக்கு தொடர்ந்து பெண்களை அழைத்து வந்து தங்கவைப்பதை இளைஞர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ஹோட்டலில் சோதனை மேற்கொண்ட போலீஸார், சிறுமியைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். மேலும், ஜெயசூர்யா மற்றும் அவருக்கு உதவிய மேலும் இருவரை கைது செய்து, அவர்கள் மூவர் மீதும் போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


மேலும் படிக்க: Crime : காணாமல்போன பெண்.. சடலத்தை தின்ற நாய்கள்.. பதறி ஓடிய மக்கள்.. என்ன நடந்தது?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண