கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக அளவில் மது மற்றும் சாராயம் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். இதனை தடுக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கல்வராயன் மலைபகுதிகளில் சாராயம் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டு வர காவல் கண்காணிப்பாளர் பகலவன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.


இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கடத்தி சென்று விற்பனை செய்வோர் மீது காவலர்கள் யாரேனும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும், சாராயம் காய்ச்சுதல் மற்றும் கடத்தி சென்று விற்பனை செய்த கைதான சில வியாபாரிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சாராய வியாபாரிகள் மற்றும் கடத்தல் காரர்களிடம் ரகசிய தொடர்பு வைத்துள்ள மற்றும் உடந்தையாக இருக்கும் காவலர்களையும் கண்டுபிடித்து அவர்களையும் களை எடுத்து வருகிறார்கள்.


இந்த நிலையில் சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், சாராய வியாபாரிகளிடம் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனுக்கு புகார் வந்தது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் உயர் காவல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். இ்தை ஏற்று சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரை பணி இடைநீக்கம் செய்து டி.ஐ.ஜி.பாண்டியன் உத்தரவிட்டார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண.