சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூரில் மழைக்காக ஒதுங்கி நின்ற மாணவர்கள் மீது படிக்கட்டுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

 

காலி மைதானத்தில் மது 

 

தாம்பரம் ( Tambaram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், தென்னேரி, சர்ச் தெருவை சேர்ந்தவர் பிரன்ச் ஜியோபெரி தவமணி, 23. மீனம்பாக்கம், ஆயட் குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் டிமோ மில்கி, (19) . இருவரும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள, சென்னை கிறித்துவ கல்லுாரியில், பி.எஸ்.சி., ‛ஹாஸ்பிலாட்டி டூரிசம்’ மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை, பிரன்ச் ஜியோபெரி தவமணி, டிமோ மில்கி உள்ளிட்ட ஆறு மாணவர்கள், சேலையூர், ஏரிக்கரை தெருவில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, திடீரென மழை பெய்தது.

 

மேலும் செய்திகளுக்கு :


 

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

 

இதையடுத்து, மழையில் இருந்து தப்பிக்க, மூன்று மாணவர்கள், அருகேயிருந்த பழமையான வீட்டிற்கு ஓடி, அந்த வீட்டின் படிக்கெட் கீழ் நின்றனர். அந்த சமயத்தில், கன மழை பெய்ததால், பத்து அடி நீளம் கொண்ட மேல் படிக்கட்டு திடீரென சரிந்து கீழே விழுந்தது. இதில், மூன்று மாணவர்கள் சிக்கி படுகாயமடைந்தனர். பிரன்ச் ஜியோபெரி தவமணி, டிமோ மில்கி ஆகிய இருவர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். மூன்றாவது நபரான, பூந்தமல்லி, பாரிவாக்கத்தை சேர்ந்த அஸ்வின், 19 என்ற மாணவர் தலையில் காயத்துடன் படுகாயமடைந்தார்


 

ஜே.சி.பியால் மீட்பு

 

இதுகுறித்து, தகவலறிந்து, போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஜே.சி.பி., மூலம் இடிபாடுகளை அகற்றி, சம்பவ இடத்தில் இறந்த மாணவர்களின் உடல்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த அஸ்வின், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.