சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியும் அவளது அப்பாவும் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கே ஜீவானந்தம் காரில் வந்து இறங்குகிறார். ஏதோ கார் வந்து நம்ம வீட்டு வாசலில் நிற்கிறதே என பார்ப்பதற்காக ஈஸ்வரியும் அவளுடைய அப்பாவும் வந்து பார்க்க ஈஸ்வரி ஜீவானந்தத்தை அடையாளம் கண்டு கொள்கிறாள். இவன் ஏன் இங்கு வருகிறான் என குழப்பத்தில் அவர்கள் இருக்க ஈஸ்வரியோட அப்பா "நீ உள்ளே போ மா நான் போய் பேசிவிட்டு வருகிறேன்" என அவளை உள்ளே அனுப்பி விடுகிறார். 



ஈஸ்வரியை பார்த்த ஜீவானந்தம் :


ஈஸ்வரி அப்பா சீதாராமன், ஜீவானந்தத்திடம் போய் "இங்க எதுக்காக வந்து இருக்கீங்க. இந்த இடத்தையும் வளைச்சு போடலாம்னா" என கேட்கிறார். இங்க பக்கத்துல இருக்க இடத்தை பார்க்க வந்தோம். இங்க ஓய்வு பெற்ற ரெஜிஸ்ட்ரார் இருப்பதாக சொன்னார்கள். அது தான் பார்க்க வந்தோம் " என சொல்கிறார் ஜீவானந்தம். சீதாராமன் பயங்கரமாக கத்த ஈஸ்வரி உள்ளே இருந்து வருகிறாள். அவளை பார்த்ததும் ஜீவானந்தத்துக்கு பழைய விஷயங்கள் எல்லாம் நியாபகம் வருகிறது. நான் உங்களுடன் தனியாக பேச வேண்டும் என ஈஸ்வரியிடம் சொல்கிறார்.


எரிச்சலைடைந்த ஈஸ்வரி :


ஈஸ்வரியும் அப்பாவை சமாதானம் செய்து ஜீவானந்ததுடன் பேசுகிறாள். "உங்க அப்பத்தா சொத்தை எடுத்துகிட்டதால உங்களுக்கு கோபமா? காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்போ நான் எது சொன்னாலும் உங்களுக்கு எரிச்சலாக தான் இருக்கும்" என்கிறார். "ஆமாங்க உங்களை பார்த்தாலே எரிச்சலா தான் இருக்கு. உங்களால எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க தெரியுமா. உழைச்சு சம்பாதிக்க முடியலனா உயிரை விட வேண்டியதுதானே" என எரிச்சலாக பேசுகிறாள் ஈஸ்வரி. 


ஷாக் கொடுத்த ஜீவானந்தம் :


"காலேஜ் படிக்கும் போது இருந்த ஈஸ்வரிக்கு இந்த மாதிரி கோபமே வராதே. வெளி உலகமே தெரியாம வெகுளித்தனமாக இருந்த ஈஸ்வரி, யாரையும் நிமிர்த்து கூட பார்க்காத ஈஸ்வரி சுவர் ஓரம் ஒரு பையன் கம்யூனிச சித்தாந்தம் எழுதிட்டு இருப்பான். அவனை பார்த்ததும் ஒரு இரண்டு செகண்ட் நிமிர்ந்து பாப்பீங்க. உள்ளுக்குள்ள படபடப்பு இருக்கும் அதே நேரத்தில் சந்தோஷமும் இருக்கும். ஆனா காதல் இருந்துச்சான்னு தெரியாது. அந்த பையனுக்கு அதே சந்தோஷமும் கொடுத்தது. அவன் உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்டபோது சத்தம் போட்டு அனுப்பிவிட்டார். உங்க மனசுக்குள்ள என்ன நினைச்சீங்களோ அதை சொல்லாமல் எனக்கு தெரியாதுன்னு சொல்லி மறச்சுட்டீங்க". 


மன அழுத்தத்தில் தள்ளிய திருமணம் :


"பதினேழு வயசு அதிகம் உள்ள குணசேகரனை கல்யாணம் செய்தது உங்களை மன அழுத்தத்தில் தள்ளிடுச்சு. அதற்கு அப்புறம், “அந்த பையன பத்தி நீங்க நினைச்சு இருக்க மாட்டீங்க. அந்த பையனோட பெயர் கூட உங்களுக்கு தெரியாது. அவன் பெயர் ஜீவானந்தம்" என சொல்லிவிட்டு செல்கிறார். ஈஸ்வரி அப்படியே உறைந்து போய் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவளை அறியாமலே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர பழைய நினைவுகள் மனதில் அசைபோடுகிறது. கலங்கிய  ஈஸ்வரியை பார்த்து அவள் அப்பா "அவன் என்ன சொன்னான்?" என கேட்க "அவன் சொன்னதையேதான் சொல்கிறான். விடுங்க அப்பா பார்த்துக்கலாம்" என சொல்கிறாள். 


 



 


கத்தி தீர்க்கும் கதிர் :


ரேணுகா ஆன்லைன் கிளாஸுக்கு தயராக இருக்க ஆவலுடன் ஐஸ்வர்யா, நந்தினி மற்றும் ஜனனியும் இருக்கிறாள். கதிர் நந்தினி எங்கே சென்றால் என வீடு முழுக்கு கேட்கும் படி காட்டு கத்து கத்துகிறான். விசாலாட்சி அம்மா ""அவங்க வெளியில ஏதாவது வேலையா இருப்பாங்க ஏன்டா இப்படி கத்துற என கேட்க "மண்டை வெடிக்குது ஒரு காபி தண்ணி கூட தரல. எல்லா பொம்பளைகளும் ஒண்ணா தான் போவாள்களா?" என கத்திகொண்டே இருக்க ஞானமும் வந்து விஷயத்தை தெரிந்து கொள்கிறான். 


ரேணுகாவுக்கு வந்த புது பிரச்சினை :


வாட்ச்மேன் அவர்கள் ஜனனி  வீட்டில் இருப்பதை சொன்னதும் அங்கே சென்று வெளியில் நின்று கொண்டு கத்துகிறான். ஜனனியும் நந்தினியும் வந்து என்ன வேணும் உங்களுக்கு என கேட்கிறார்கள். அவர்களை வழக்கம் போல தீட்டிய கதிர் "இங்க என்ன வேலை உனக்கு?" என கேட்கிறான். "சொத்தை எப்படி மீட்பது என் டிஸ்கஸ் செய்து கொண்டு இருக்கிறோம்" என்கிறாள் நந்தினி. ரேணுகாவும் ஐஸ்வர்யாவும் உள்ளே இருந்து வர ஞானம் அவர்களை திட்டி உள்ளே போக சொல்கிறான். அனைவரும் சென்று விடுகிறார்கள். ஜனனி இதை பார்த்து யோசித்து கொண்டே இருக்கிறாள் அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.