காதல் விவகாரங்களில் சில நேரம் அதிகளவில் சிக்கல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் காதல் பிரச்சினையில் பெண் ஒருவர் மற்றொரு பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பட்டபகலில் இளம் பெண் வீட்டிற்கே சென்று ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 சென்னை மதுரவாயில் பகுதியில் லோகா(30) என்ற பெண் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு நேற்று பிற்பகலில் ஒருவர் வந்து கதவை தட்டியுள்ளதாக தெரிகிறது. அப்போது வீட்டில் லோகா மற்றும் அவருடைய தாய் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். அவர்கள் கதவை திறந்து பார்த்த போது வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகிறது. லோகாவை பார்த்தவுடன் அந்தப் பெண் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து முகத்தில் வீசியுள்ளதாக தெரிகிறது. 




அதன்பின்னர் அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் லோகா மற்றும் அவருடைய தாயார் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 


அதன்படி லோகா மீது ஆசிட் வீசிய பெண் ஐஸ்வர்யா(37) என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யாவுடன் நேற்று லோகா வீட்டிற்கு தீனதயாளன்(36) என்ற நபர் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தீனதயாளனை ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன்பாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தற்போது ஐஸ்வர்யா பார்த்திபன் என்ற நபரை காதலித்து வருவதாக தெரியவந்துள்ளது. 


 


இந்தச் சூழலில் பார்த்திபனை லோகாவும் காதலித்து வருவதாக தீன தயாளன் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா லோகா மீது ஆசிட் வீச திட்டமிட்டுள்ளார். அதன்காரணமாக லோகா வீட்டிற்கு சென்று ஆசிட் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது. தன்னுடைய காதலரை வேறு ஒரு பெண் காதலிக்கிறார் என்பதை அறிந்த பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண