சென்னை: பைக்கில் 114 கி.மீ வேகம்: வித்தை காட்ட ஆசைப்பட்டு விபத்தில் உயிரிழந்த இருவர்: சிக்கிய லைவ் டெலிகாஸ்ட் வீடியோ
வாகனத்தில் அதிவேக பயணம் மேற்கொண்ட இருவர், கீழே விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement

மோட்டார் சைக்கிள் வேக விபத்து
கடந்த சில வருடங்களாகவே சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில், வேகமாக செல்வதும் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று வேகமாக செல்லும் பொழுது பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடைபெறுவது தொடர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து காவல்துறையினரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், தொடர்ந்து இளைஞர்கள் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர்கள் பிரவின் (19) சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஹரி (17) தரமணி பகுதியை சேர்ந்தவர். இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் நேற்று முன் தினம் தரமணி 100 அடி சாலையில், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அதிவேகமாக 114 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளனர். பிரவின் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ஹரி செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றுள்ளார்.
தரமணி சந்திப்பு அருகே சென்றபோது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த லோடு வேன் ஒன்று திரும்பியது. இதைப் பார்த்த பிரவீன், வேன் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிண்டி போக்குவரத்து போலீஸார் இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்றிரவே மருத்துவமனையில் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரியும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தரமணி, கட்டபொம்மன் தெருவை சேர்ந்த லோடு வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரவீனுக்கு ஒட்டுநர் உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் சிக்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கிய ,வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்திலும் வேகமாக பரவி வருகிறது.
Just In
அலுவலக வாசலிலேயே தூக்கில் தொங்க தயார் - டிஎஸ்பி பரபரப்பு பேட்டி
வில்லனாக மாறிய அஜித்... அக்கா மாமனாருக்கு பாட்டில் குத்து - தஞ்சாவூரில் அதிர்ச்சி
"விரலை உடைத்து விடுவார்கள் மிரட்டல் விடுத்த எஸ்பி" - டிஎஸ்பி பரபரப்பு குற்றச்சாட்டு
தொழில் ஆசை காட்டி மோசடி! 110 சவரன் நகை, மிரட்டல்: அதிர்ச்சியில் பெண்!
வரதட்சணை கொடுமையால் ஷார்ஜாவில் கேரளப் பெண் தற்கொலை: அதிர்ச்சி தரும் காரணம்
தீராத ஆசை! வேறு நபர்களுடன் மனைவி உல்லாசம்! கணவரும், காவல் அதிகாரியும் கைது!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.