Marriage Dispute: சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது மனைவி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி அடுக்கும் குற்றச்சாட்டுகள்:

சென்னையை சேர்ந்த தொழிலதிபரான பிரசன்னா சங்கர் பிரபல நிறுவனமான ரிப்ளிங்கின் இணை நிறுவனர் ஆவார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவி திவ்யா சசிதரனிடமிருந்து, தனது மகனை பராமரிக்கும் உரிமைக்காக போராடி வருவதாக அண்மையில் சமூக வலைதளத்தில் நீண்ட பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மனைவியின் தொல்லை தாங்காமல் ஊரை வீட்டே ஓடுவதாகவும், அவர் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவதாகவும், விவாகரத்திற்கு கூடுதல் பணத்தை கேட்டு மனைவி மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தான், தனது கணவருக்கு தாசிகளுடன் உறவு இருந்ததாகவும், ஓபன் மேரேஜிற்கு ஒப்புக் கொள்ள தன்னை கட்டாயப்படுத்திதாகவும் திவ்யா குற்றம்சாட்டியுள்ளார்.

"வீட்டில் ரகசிய கேமரா"

கணவர் மீதான குற்றச்சாட்டுகல் தொடர்பாக பேசிய திவ்ய, “ பிரன்னா  பாலியல் தொழிலாளர்களுடன் உறவு வைத்திருந்தார். வற்புறுத்தி ஓபன் மேரேஜ் அதாவது திருமணத்தை மீறியும் பிறருடன் உறவு வைத்துக் கொள்ளும் முறைக்கு சம்மதிக்க வற்புறுத்தினார். என்னை உளவு பார்க்க வீட்டிலேயே ரகசிய கேமராக்களை வைத்தார்” என குற்றம்சாடிட்யுள்ளார். இதற்கான ஆதாரம் என குறிப்பிட்டு மகன் மீதான உரிமைகோரலுக்கான தனது சர்வதேச வழக்கின் நூற்றுக்கணக்கான பக்க நீதிமன்ற ஆவணங்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் பிற பதிவுகள் ஆகியவற்றை குறிப்பிட்டு The sanfrancisco standard என்ற அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சொத்து வரியை தவிர்க்க தன்னையும், 9 வயது மகனையும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அலைகழித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

"கட்டாயப்படுத்தி உடலுறவு"

மேலும், ”2016ம் ஆண்டு தான் குழந்தையை பெற்றெடுத்த பிறகு கட்டாயப்படுத்தி தன்னுடன் உடலுறவு கொண்டார். வலியில் இருக்கிறேன் என்னால் முடியாது என கூறினாலும் என்னை வற்புறுத்தினார், மேலும் மறுத்தால் வெளியில் வேறு யாரிடமாவது பெற்றுக்கொள்வோன் என மிரட்டினார். என்னுடன் குறைந்த நேரமே இருந்தபோதிலும், சங்கர் எப்போதும் என்னிடமிருந்து உடலுறவையே எதிர்பார்த்தார்.

இதையும் படியுங்கள்: Marriage Dispute: தகாத உறவு, ரூ.9 கோடி போதாது..! மனைவியின் அராஜகம்? ஊரை விட்டு ஓடிய சென்னை தொழிலதிபர்

”நண்பர்களுடன் உடலுறவு”

பலருடன் அவர் உடலுறவு கொண்டதகாவும், தன்னையும் அவரின் பல நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வலியுறுத்தினார். அது என்னுடைய மோசமான நாட்களாக இருந்தன.  அவருக்காக நான் எனது தொழில் எதிர்காலத்தையே விட்டுக்கொடுத்தேன். ஆனால் அவரது நடவடிக்கையால் எனது வாழ்க்கையையே தொலைத்துவிட்டதை உணர்ந்தேன். அத்தகைய சூழலில் தான் எங்களது திருமணம் முடிவுக்கு வந்தது” என திவ்யா குற்றம்சாட்டியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கர் - திவ்யா கதை என்ன?

கடந்த 2007ம் ஆண்டு முதன்முறையாக சந்தித்துக்கொண்ட சங்கர் மற்றும் திவ்யா,  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டேட்டிங் செய்யத் தொடங்கியனர். கல்வியில் உயர்நிலை பெற்று தொழில்துறையில் தங்களுக்கான பயணங்களை மேற்கொண்டபடியே,  இருவரும் பல ஆண்டுகளாக நீண்ட தூர உறவைப் (Long-distance relationships) பேணி வந்தனர். தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, திவ்யாவை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து 2016ம் ஆண்டு அந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.

பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து கிடைத்த அனுபவத்தின் மூலம் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் தனது ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிப்ளிங்கை கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடங்கினார். வேகமாக தொழிலில் பெற்ற வளர்ச்சியால் பில்லியனர் அந்தஸ்தை அடைந்த அவர்,  தற்போது ரிப்ளிங்கின் பங்குகளில் 9 சதவீதத்தை கைவசம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இருவருக்கும் இடையே கருத்து மோதல் காரணமாக பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர். ஆனால், குழந்தையை யார் பராமரிப்பது என்ற விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றங்களை சுமத்தி வருகின்றனர். மனைவி தன்னிடம் விவாகரத்துக்கு கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாக பிரசன்னாவும், கணவர் தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்கிறார் என திவ்யாவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.