சென்னை பச்சை மலை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கூறி மின்னழுத்த கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் கிஷோர் (21), இவர் ஒருவரை 2 ஆண்டுகளாக காதலித்தாக கூறப்படுகிறது.

 



 

அவரும் இவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் பள்ளியில் படித்து வரும் அவருக்கு தற்பொழுது 16 வயது நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படித்து வரும் அவரை திருமணம் செய்து வைக்க கோரி தனது தாயாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் படித்து வருவதால் சில ஆண்டு காலம் தனது மகனை  காத்திருக்க சொல்லியுள்ளார். 

 

மேலும் தான் காதலித்து வரும் 16 வயதே நிரம்பிய பள்ளி மாணவியை திருமணம் செய்து வைக்க முடியாது என தனது தாய் கூறியதில், ஆத்திரமடைந்த கிஷோர் குரோம்பேட்டை பச்சை மலை அருகே உள்ள உயர் மின்னழுத்த மின் கம்பியின் உச்சியில் ஏறி நின்றுக் கொண்டு, காதலித்த பெண், மற்றும் தனது தாயை வர வைக்க வேண்டும் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி கிஷோரை பத்திரமாக கீழே இறக்கி மீட்டனர். மேலும் தற்கொலை மிரட்டல் விடுத்த கிஷோரிடம்  குரோம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






 

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி இளைஞர் ஒருவர் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தற்கொலை தீர்வல்ல..

 

தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. அதனால், தற்கொலை எண்ணங்கள் தோன்றும்போது, உடனடியாக மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும். பிரச்னையின் தன்மைக்கு ஏற்ப, மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும். காய்ச்சல், வயிற்று வலிக்கு மருத்தவரை சந்திப்பது போலத்தான், மனதின் ஆரோக்கியம் குன்றும்போது மனநல மருத்துவரை சந்திப்பதும். அதற்குத் தயக்கமே வேண்டாம் தூக்கியெறியுங்கள். அரசு இலவச மனநல ஆலோசனைக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தற்கொலை எண்ணத்தைக் கடக்கலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.